Saturday, May 10, 2025

ஒரு நைட்டுக்காக காதலர் செய்த செயல்...! தவித்து போன பிரியா பவானி ஷங்கர்

Priya Bhavani Shankar Tamil Actress
By Karthick a year ago
Report

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் பிரியா பவானி ஷங்கர்.

பிரியா பவானி ஷங்கர்

செய்தி வாசிப்பாளராக தனது திரை பயணத்தை துவங்கிய பிரியா பவானி ஷங்கர், பின்னர் சின்னத்திரையில் நாயகியாக நடிக்க துவங்கி தற்போது வெள்ளித்திரையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

priya-bhavani-shankar-emotional-about-boyfriend

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா யானை, ராகவா லாரன்ஸின் ருத்ரன், தனுஷுடன் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை படங்களில் வரிசையாக நடித்து அவர் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

காதலரின் செயல்

அவ்வப்போது தனது காதலரை குறித்து பேட்டிகளில் பேசி வரும் பிரியா, தன்னுடைய பிறந்தநாளுக்காக அவர் செய்த காரியத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

காதலருடன் நெருக்கத்தில் பிரியா பவானி சங்கர் - வாயை பிளக்கும் ரசிகர்கள்

காதலருடன் நெருக்கத்தில் பிரியா பவானி சங்கர் - வாயை பிளக்கும் ரசிகர்கள்

தன்னுடைய பிறந்த நாள் அன்று தன்னை சர்ப்ரைஸ் செய்ய வெளிநாட்டில் அப்போது பார்ட் டைம் வேலை பார்த்து வந்த காதலர் ராஜவேலு, 4 மாதங்கள் அவர் சம்பாதித்த பணத்தை கொண்டு இந்தியா வந்து தன்னை சர்ப்ரைஸ் செய்ததாக தெரிவித்தார்.

priya-bhavani-shankar-emotional-about-boyfriend

ஒரு நாளுக்காக, அதுவும் தன்னை சர்ப்ரைஸ் செய்ய தன்னுடைய 4 மாத சம்பளத்தை செலவு செய்து வந்து மறுநாளே திரும்பிய காதலர் குறித்து நெகிழ்ச்சியுடன் பிரியா பவானி ஷங்கர் பகிர்ந்து கொண்டுள்ளார்.