எகிறிய பால் விலை; எவ்வளவு தெரியுமா? ஆவின் நிறுவனத்திற்கு மக்கள் கோரிக்கை!
தனியார் பால் விலை திடீரென லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
பால் விலை உயர்வு
தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு நிறுவனமான ஆவின் மூலமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 84 சதவீதம் தனியார் நிறுவனம் மூலமும், 16 சதவீதம் ஆவின் நிறுவனம் மூலமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆவின் நிறுவனம் மூலம் சராசரியாக நான் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இயங்கும் வேதர், விஜய் மற்றும் யுகா ஆகிய பால் நிறுவனங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
ஆவினுக்கு கோரிக்கை
தொடர்ந்து ராஜ், அமிர்தா, ஆதான், சக்ரா, தமிழ், பாரத். எஸ். என்.பி., எஸ்.பி.எஸ். மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய நிறுவனங்கள் நாளை மறுநாள்(சனிக்கிழமை) முதல் பால்விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதிகரிக்க தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆவின் பால் உற்பத்தியையும், பால்பொருட்களின் உற்பத் தியையும் அதிகரித்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் விற்பனையாளர் நல சங்கத்தினரும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.