ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுபாடு ..வெளியான அறிவிப்பு- எங்க தெரியுமா?
Government of Tamil Nadu
Chennai
By Vidhya Senthil
தமிழக அரசு ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆட்டோ
கடந்த சில தினங்களுக்கு முன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 19 வயது இளம்பெண் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த போது அவரை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோயம்பேடு அருகே இளம் பெண்ணை விட்டு விட்டு ஆட்டோவில் தப்பி சென்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர் தயாளன் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் தமிழக அரசு ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதிய கட்டுப்பாடு
- ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும்
- கிளாம்பாக்கத்தை சுற்றி ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
- 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை சார்பில் பூத் அமைக்கப்பட உள்ளது.
- காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும்.
- கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.
- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்ல மட்டுமே அனுமதி
- கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்