அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு வைத்த நபர் - சிறையில் நடந்த கொடூர சம்பவம்!

L K Advani BJP Crime
By Vidhya Senthil Sep 19, 2024 10:50 AM GMT
Report

அத்வானி யாத்திரை சென்ற வழியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்வானி யாத்திரை

மதுரையில் பாஜக சார்பில் கடந்த 2011 -ம் ஆண்டு ரத யாத்திரை நடத்தப்பட்டது . இந்த ரத யாத்திரையில் பாஜக முத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டார். அப்போது திருமங்கலம் அருகே அத்வானி சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

jail

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஜாகிர் உசேன் (37) என்பவரைக் கைது செய்து புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பாதுகாப்பு கருதிக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறைக்கு மாற்றப்பட்டார்.

தகுதியில்லாத நபர்..ராகுல் காந்தி பற்றிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை -எச்.ராஜா!

தகுதியில்லாத நபர்..ராகுல் காந்தி பற்றிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை -எச்.ராஜா!

இந்நிலையில், நேற்று இரவு சிறையில் திடீரென ஜாகிர் உசேன் எறும்பு பவுடரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட சிறைக் காவலர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 கொடூர சம்பவம்

மேலும் அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் ஜாகிர் உசேனிற்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது .

advani

ஆனால் ஜாமீன் கிடைத்தும் அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் தொகையைச் சமர்ப்பிக்க முடியாததால் அவரால் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த ஜாகிர் உசேன் சிறையில் உள்ள எறும்பு மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதது தெரியவந்துள்ளது.