தகுதியில்லாத நபர்..ராகுல் காந்தி பற்றிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை -எச்.ராஜா!
ராகுல் காந்தி பற்றிய கருத்தில் இருந்து பின் நான் பின்வாங்கமாட்டேன் என எச்.ராஜா பேசியுள்ளார்.
எச்.ராஜா
ராமநாதபுரத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகம் போதை மாநிலமாக உள்ளது என தொடர்ந்து கூறி வருகிறோம். அதற்கேற்ப 850 போலீசார் போதை கடத்தலுக்கு துணை போவதாக உளவுத்துறை அறிக்கையின் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தனியார் உதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியர் மகன் 45 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி
இந்த சம்பவம் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோட்டையான திருச்சியில் நடந்துள்ளது. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியவரை பிடிக்க 200 போலீசார் செல்கின்றனர்.
நான் 1964 முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வருகிறேன். செல்வப்பெருந்தகை புரட்சி பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பகுஜன் சமாஜ், ஐந்தாவதாக காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். நான் வாதம் செய்ய அவர் தகுதியில்லாத நபர். ராகுல் காந்தியை பற்றி கூறிய கருத்தில் இருந்து நான் பின் வாங்கப்போவதில்லை. என்று தெரிவித்துள்ளார்.