ஷவர்மா சாப்பிட்டு இளம் பெண் உயிரிழப்பு ? இறக்கும் நொடியில் நரக வேதனை.. கதறிய குடும்பம்!

Chennai Crime
By Vidhya Senthil Sep 19, 2024 05:47 AM GMT
Report

சென்னை அருகே ஷவர்மா சாப்பிட்டதால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் சுவேதா வயது 22 . இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி போரூரில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

shawarma

பின்னர் வீட்டில் மீன் குழம்பும் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு சுவேதாவிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -விடிய விடிய.. கள்ளக்காதலின் வெறிச்செயல்!

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை -விடிய விடிய.. கள்ளக்காதலின் வெறிச்செயல்!

இதனையடுத்து அவருக்கு மேல் சிகிச்சைக்காக இரு நாட்களுக்கு முன்பு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்த சூழலில் நேற்று காலை சுவேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 உயிரிழந்த சம்பவம் 

இதுகுறித்து மதுரவாயல் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

death

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண் சுவேதா ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மதுரவாயல் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இளம் பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா சாப்பிட்டதால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.