28 மாணவிகள்..கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை - விடுதியில் நடந்த கொடூரம்!

Sexual harassment India Andhra Pradesh Crime
By Swetha Sep 19, 2024 05:33 AM GMT
Report

விடுதி மாணவிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 விடுதியில்..

ஆந்திர மாநிலம் ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. எர்ரகுண்ட பள்ளியை சேர்ந்த சசிகுமார் (52) என்பவர் இந்த விடுதியை நிர்வகித்து வருகிறார். இவருடைய 2-வது மனைவி பனி ஸ்ரீ விடுதி வாடன் ஆகவும் மருமகள் பாதுகாவலராகவும் உள்ளனர்.

28 மாணவிகள்..கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை - விடுதியில் நடந்த கொடூரம்! | 28 Womens Were Raped In Hostal Shock Police Inqury

அந்த விடுதியில் 3-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் 45 மாணவிகள் தங்கி வருகின்றனர். சசிகுமார் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். அவ்வப்போது இரவில் விடுதிக்கு வரும் அவர் மாணவிகள் அறைகள் அருகே நின்று புகைபிடித்தபடி பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனை வெளியே சொல்லாமல் மாணவிகள் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள 3 சிறுமிகளிடம் உங்களை அழகாக போட்டோ எடுக்கிறேன் என்னுடன் வாருங்கள் என வற்புறுத்தி சசிகுமார் காரில் அழைத்துச் சென்றார்.

பிறகு ஒரு வீட்டில் அடைத்து சிறுமிகளின் கை, கால்களை கட்டி போட்டு விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் அந்த சிறுமிகள் விடுதியில் கொண்டு விட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் கடும் மன உளைச்சலுடன் இருந்தனர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.

மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து..விடிய விடிய பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்!

மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து..விடிய விடிய பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்!

 பாலியல் வன்கொடுமை

அதன்படி, போலீசார் விடுதிக்கு சென்று ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது சிறுமிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரை காரில் அழைத்துச் சென்று கை கால்களை கட்டி சசிகுமார் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அவருடைய மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் அவர்கள் இருந்துள்ளனர்.

28 மாணவிகள்..கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை - விடுதியில் நடந்த கொடூரம்! | 28 Womens Were Raped In Hostal Shock Police Inqury

இது தொடர்பாக போக்சோ பிரிவுகளின் கீழ் சசிகுமார் அவருடைய மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரனையில், சசிகுமார் மாணவிகள் விடுதியை அனுமதி இல்லாமல் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

அவர் மீது அங்குள்ள 4 மாணவிகள் தனித்தனியாக புகார் அளித்தனர். கடந்த 4 மாதங்களில் மொத்தம் 28 மாணவிகளை கை, கால்களை கட்டி பலாத்காரம் செய்துள்ளார். அங்குள்ள கண்காணிப்பு கேமரா உள்ள அறை பூட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.