சிலிண்டர் விலை உயர்வு - மாத முதலிலேயே அதிர்ச்சியில் மக்கள்!
வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.
வர்த்தக சிலிண்டர்
வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
அதன்படி, ஜனவரி மாதம் விலை குறைக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.12.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,937ஆக இருந்தது.
விலை உயர்வு
இந்நிலையில், மார்ச் 1-ம் தேதியான இன்று வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 23 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1960.50 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.918.50 ஆக உள்ளது.