வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது.
உயர்ந்த சிலிண்டர் விலை
கடந்த சில மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலையும் மாத முதல் நாளிலேயே உயர்வை சந்தித்து வந்தது இந்த நிலையில் ஜூலை மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்து, ரூ. 2,186 ஆக விற்பனையாகி வந்த நிலையில் அதே மாதத்தில் ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனையாகியது.
அதேபோல் கடந்த மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து, ரூ.2141-க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து, ரூ.2,045க்கு விற்கப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போது வணிக பயன்பாட்டுக்கு உள்ள சிலிண்டரின் விலை குறிந்துள்ளது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.