Tuesday, Jul 15, 2025

நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

M K Stalin Cuddalore Ram Nath Kovind
By Swetha Subash 3 years ago
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கடலூர் அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

7 பேர் உயிரிழப்பு

நேற்று, தடுப்பணையில் ஆழமான பகுதியில் இறங்கி அனைவரும் நீரில் மூழ்கிய நிலையில் உடனடியாக சத்தம்கேட்டு திரண்ட கிராம மக்கள், ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பிரதமர் - குடியரசு தலைவர் இரங்கல்

இந்நிலையில், ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் | President Ranmath Govind Mourns Women Drowned

பிரதமர் மோடியை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில்,

"தமிழகத்தின் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி ஏழு பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

‘தமிழ் பேசவே பயமா இருக்கு’ - பிரபல நடிகர் ஓப்பன் டாக்