அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை : ஹைதரபாத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!
ஹைதராபாத்தில் கடந்த 28-ம் தேதி 17 வயது சிறுமி 5 பேர்கொண்ட சிறுவர்களால் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மீண்டும் ஒரு சம்பவம்
இந்த சம்பவம் வெளிவந்து ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 31-ம் தேதி, சிறுமி ஒருவர் ஷாகின் நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10 மணியளவில் வாடகை காரை புக் செய்து பயணித்துள்ளார்.
வாடகை காரை ஓட்டிய ஷேக் காலிம் அலி என்பவர் செல்லும் வழியில் தனது நண்பரான முகமது லுக்மான் அகமது யஸ்தானியை காரில் ஏற்றியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து கோன்டர்க் கிராமத்தில் உள்ள முகமது லுக்மானின் வீட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மறுநாள் அதிகாலை 5 மணியளவில் சுல்தான்ஷாகி பகுதியில் சிறுமியை இறக்கி விட்டுள்ளனர்.
சிறுமி கண்டுப்பிடிப்பு
இதனிடையே மகள் காணாமல் போனது குறித்து சிறுமியின் பெற்றோர், முகல்புரா காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் 363-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி அதிகாலை, சுல்தான்ஷாகி பகுதியில் போலீசார் சிறுமியை மீட்டனர். போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.
இதன் அடிப்படையில், குற்றவாளிகளான ஷேக் காலிம் அலி மற்றும் முகமது லுக்மான் அகமது யஸ்தானி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சிறுமி காணாமல் போன வழக்கை பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றினர்.
ஹைதராபாத் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுமியின் புகைப்படம் வெளியீடு..வலுக்கும் கண்டனம்!