திடீரென சென்னை வரும் ஜனாதிபதி - பெட்ரோல் குண்டு வீச்சால் பலத்த பாதுகாப்பு!

Chennai Draupadi Murmu
By Sumathi Oct 26, 2023 04:17 AM GMT
Report

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக சென்னை வருகிறார்.

திரவுபதி முர்மு

சென்னை, கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

draupadi-murmu

இன்று மாலை 6 மணிக்கு விமானப்படை தனி விமானம் மூலம் புறப்பட இருக்கிறார். மாலை 6.50மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தை அடைந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை செல்கிறார்.

பதவியேற்பு விழாவில் வேலு நாச்சியாரை புகழ்ந்த திரவுபதி முர்மு, என்ன கூறினார்?

பதவியேற்பு விழாவில் வேலு நாச்சியாரை புகழ்ந்த திரவுபதி முர்மு, என்ன கூறினார்?

சென்னை வருகை

தொடர்ந்து, இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்க இருக்கும் அவர் நாளை காலை 9 முதல் 9.30 மணி வரை முக்கிய பிரமுகர்களை ஆளுநர் மாளிகையில் சந்திக்கவுள்ளார்.

திடீரென சென்னை வரும் ஜனாதிபதி - பெட்ரோல் குண்டு வீச்சால் பலத்த பாதுகாப்பு! | President Draupadi Murmu Will Visit Chennai

அதன்பின், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். பகல் 11.55 மணிக்கு பழைய விமான நிலையம் செல்லும் அவர், 12.05மணிக்கு விமானப்படையின் தனி விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார்.

இதற்கிடையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.