பதவியேற்பு விழாவில் வேலு நாச்சியாரை புகழ்ந்த திரவுபதி முர்மு, என்ன கூறினார்?
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார், இதுவரை குடியரசு தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்த் இன்று பதவியில் இருந்து வெளியேறுகிறார்.
திரவுபதி முர்மு
நாட்டின் 14வது குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரவுபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரவுபதி முர்மு, குடியரசுத்தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் அதன் பின்னர் பதவியேற்பு விழாவில் பேசிய திரவுபதி முர்மு :
ஏழை வீட்டில் மகளாகப் பிறந்த நான், நாட்டின் குடியரசு தலைவர் ஆக முடியும் என்பது தான் ஜனநாயகத்தின் சக்தி.
பெண்கள் மட்டும் இளைஞர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்துவேன். எனது பதவியில் கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும்.
இந்த நேரத்தில் என்னை தேர்ந்தெடுத்த எம்.பி-க்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலகட்டத்தில் உலகத்திற்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது.
வேலுநாச்சியாரை புகழ்ந்த குடியரசு தலைவர்
சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகள் பட்டியலில் வேலு நாச்சியாரை குறிப்பிட்டு திரெளபதி முர்மு .
வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய் ஆகியோர் தேச பாதுகாப்பில் புதிய உயரங்களை அளித்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டி எழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக சேவை செய்வேன் என்று கூறினார்.
அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் இவ்வாறு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம் என்று பதவியேற்றபோது பேசினார்.