கோயில் கட்டும் அதே நேரத்தில் புதிய நாடாளுமன்ற கட்டத்தையும் நாம் கட்டுகின்றோம் : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது.
இந்த நிலையில் நாட்டின் குடியரசுத்தலைவராக பொறுபேற்றுள்ள திரவுபதி முர்மு உரையற்றினார் அதன் சுருக்கம் உங்களுக்காக :
இந்தியா தனது பிரச்சினையை தீர்க்க பிற நாடுகளைச் சார்ந்திருக்காது மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன அனைவருக்கும் ஆன வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு வெற்றி நடை போட்டு வருகிறது .
நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம் இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும் அதே சமயம் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது .
[
ஏழைகளுக்கு வலிமை சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது
கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது திறமையான முடிவு எடுக்கும் இந்த அரசை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி
தீவிரவாதத்திற்கு எதிராக நம் அரசு மிகப் திறமையாக செயல்பட்டு வருகிறது அரசுத் துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது சட்டப்பிரிவு 370 நீக்கம் முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளது.
பாதுகாப்பு விஷயத்தை பொருத்தமட்டில் பிரமோஸ் ஏவுகணை நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது
துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி இணை நம் அரசு கொடுத்து வருகிறது ஜல்ஜீவன் திட்ட மூலம் பெரும்பாலான ஏழைகள் பயன்பெறுகின்றனர்
அரசு எடுத்த உறுதியான பல நடவடிக்கைகள் மூலமாக நாட்டு மக்கள் மகிழ்ச்சியினை அனுபவித்து வருகின்றனர்.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரியான ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்
50 கோடி ஏழை மக்கள் மத்திய அரசின் இலவச சுகாதார காப்பீட்டை பெற்றுள்ளனர் நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிதி மோசடியாளர்களை நாட்டுக்கு திரும்பகொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
பழங்குடியின மக்களுக்கு முன்னே எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பு வசதிகளை நம் இந்திய அரசு செய்துள்ளது இந்திய விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் உலக அளவில் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர் மாற்றுத்திறனாளி நலனுக்காக பல்வேறு திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகின்றோம்
இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய சக்தி திறமையான இந்திய இளைஞர்களின் உலகமே உற்று நோக்குகிறது
கோயில் கட்டும் அதே நேரத்தில் புதிய நாடாளுமன்ற கட்டத்தையும் நாம் கட்டுகின்றோம்
புதிய வீடுகள் கட்டும்போது அவை பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்படுகின்றன அதேசமயம் நமது பாரம்பரியம் ஆகாயத்தை தொடுவதற்கான தைரியத்தை வழங்குகின்றது
உதான்திட்டன் மூலம் சிறிய நகரங்களுக்கும் விமான பயணம் தற்போது சாத்தியமாகியுள்ளது
ரயில் நிலையங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் ரயில் சேவை பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது
ஆப்கானிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவி செய்து வருகிறோம் தனியா நிறுவனம் கூட செயற்கைக்கோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது
அடிமைத்தனத்தை காலணி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன நாட்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது ஐஎன்எஸ் விக்ரம் விமான தாங்கி கப்பலை நாமே கட்டியுள்ளோம்.
கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் மெட்ரோ கட்டமைப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேகம் அசாதாரமானது உலக அளவில் நலப் பணிகளை செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது
ஜனநாயகத்தின் மையமான நாடாளுமன்றத்தில் நமது செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் நமக்கான லட்சியத்தை அடைய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனது திரவுபதி முர்மு தெரிவித்தார்