இந்த குட்டி நாட்டுக்கு கணவன், மனைவி தான் அதிபர் - துணை அதிபர் - எதற்காக தெரியுமா?
கணவன், மனைவி இனைந்து அதிபர் மற்றும் துணை அதிபர்களாக ஆட்சி செய்து வரும் நாட்டை பற்றிய தகவல்.
இல்ஹாம் அலியேவ்
அஜர்பைஜான் சுமார் ஒரு கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு குட்டி நாடாகும். இந்நாட்டில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இல்ஹாம் அலியேவ் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு அவரே தொடர்ந்து வெற்றிபெற்று ஆட்சி செய்து வருகிறார்.
இதனிடையே, அந்நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு துணை அதிபர் பதவியை இல்ஹாம் அலியேவ் உருவாக்கினார். இந்த பதவியை தேசத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கியதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், தனது மனைவி மெஹ்ரிபன் அலியேவை துணை அதிபர் பதவியில் அமரவைத்தார்.
முதல் பெண் துணை அதிபர்
துணை அதிபர் பதவியேற்றதன் மூலம், அஜர்பைஜான் நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றார். தற்போது, கணவனும் மனைவியும் இணைந்து சமூக பொருளாதாரம் குறித்து முடிவெடுத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
மெஹ்ரிபன் அலியேவுக்கு முன்பு, அர்ஜென்டினாவின் அதிபரும், துணை அதிபரும் கணவன் - மனைவியாக இருந்தனர், அந்நாட்டு அதிபர் ஜூவான் இறந்த பிறகு, துணை அதிபர் இசபெல் நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.