அமெரிக்கா அதிபர் தேர்தல்...டிரம்பிற்கு ஆதரவு - பின்வாங்கிய விவேக் ராமசாமி..!
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகியுள்ளார்.
விவேக் ராமசாமி
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து உலகெங்கிலும் பெரும் பிரபலமானார்.
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார் என்று பரவலாக கருத்துக்கள் வெளியாகின.
உலக அரசியலிலே பெரும் இடத்தை பிடித்துள்ள அமெரிக்கா அதிபர் யார் என்பது தான்..? பல நாடுகளின் கவனம் தற்போது.
விலகல்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரண்டு கட்சிகள் போட்டியிடும். இந்த கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்ய, உள்கட்சி தேர்தலை நடத்தும். அதில் வெற்றி பெறுபவர் அதிபர் வேட்பாளராக களமிறங்குவார். இதுவே அந்நாட்டின் மரபு.
அப்படி, குடியரசு கட்சி தரப்பில் அதிபர் தேர்தலுக்காக விருப்பம் தெரிவித்திருந்த விவேக் ராமசாமி, அண்மையில் நடைபெற்ற ஐயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.