செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வி - அமைதியாக எழுந்து சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

ADMK Edappadi K. Palaniswami DMDK Premalatha Vijayakanth
By Sumathi Mar 08, 2025 10:19 AM GMT
Report

 அதிமுக - தேமுதிக விரிசல் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதிலளிக்க மறுத்துள்ளார்.

 அதிமுக - தேமுதிக

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்க்கொண்டது.

premalatha vijayakanth - edappadi palanisamy

அப்போது தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நாங்கள் கூறினோமா என கேட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு தேமுதிக மகளிர் அணியினருடன் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார்.

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய திமுக - வீடியோ வெளியிட்டு கொதித்த விஜய்

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய திமுக - வீடியோ வெளியிட்டு கொதித்த விஜய்

 பிரேமலதா மறுப்பு

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்கள் பாதுகாப்பு பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும், மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருந்தலும் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உள்ளது.

செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வி - அமைதியாக எழுந்து சென்ற பிரேமலதா விஜயகாந்த்! | Premalatha Vijayakanth Reaction For Admk Issue

தமிழக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை, அன்னை மொழி காப்போம்; அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் கேப்டன் கொள்கை.

தமிழ்நாட்டில் தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என்றார். மேலும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்க மறுத்துவிட்டார்.