பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய திமுக - வீடியோ வெளியிட்டு கொதித்த விஜய்

Vijay Tamil nadu DMK Viral Video Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Mar 08, 2025 04:58 AM GMT
Report

மகளிர் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்டு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகளிர் தினம்

மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டு மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vijay

அதில் பேசியுள்ள அவர், தமிழ்நாடு முழுக்க இருக்க என் அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று அத்தனை பேருக்கும் இந்த நாளில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

ஷூட்டிங்கில் எழுதி கொடுத்ததை விஜய் படிக்குறாரு; தொகுதி எண்ணிக்கை கூட தெரியல - அண்ணாமலை சாடல்

ஷூட்டிங்கில் எழுதி கொடுத்ததை விஜய் படிக்குறாரு; தொகுதி எண்ணிக்கை கூட தெரியல - அண்ணாமலை சாடல்

விஜய் வீடியோ

பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும்.. அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது, எந்த சந்தோஷமும் இருக்காது தானே. இப்படி நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நாம் எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது.

எல்லாமே இங்கு மாறக் கூடியது, மாற்றத்திற்கு உரியதுதானே.. கவலைப்படாதீர்கள். 2026ல் நீங்கள் எல்லாம் சேர்ந்து.. இல்லை, நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம்.

அதற்கு இந்த மகளிர் தினமான இன்று அனைவரும் உறுதியேற்போம். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களின் மகனாக, அண்ணனாக, தோழனாக, தம்பியாக உங்களுடன் நிற்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.