காவேரி விவகாரத்தில் மூக்கை துளைத்த பிரேமலதா - கடுப்பான முதல்வர்!

M. K. Stalin Karnataka Water Premalatha Vijayakanth
By Vidhya Senthil Jul 28, 2024 09:07 AM GMT
Report
இனிவரும் காலங்களில் விவசாயத்திற்கும், குடி தண்ணீகுக்கும் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை அரசு கொண்டு வர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசு

 ஒரு டிஎம்சி தண்ணீரை தினந்தோறும் தமிழகத்துக்கு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டு உள்ளது. ஒரு டிஎம்சி தண்ணீர் தர மறுத்த போது, ஒரு லட்சம் கண அடி தண்ணீர் திறந்து விடக் கூடிய சூழலை உருவாக்கி உள்ளது.

காவேரி விவகாரத்தில் மூக்கை துளைத்த பிரேமலதா - கடுப்பான முதல்வர்! | Premalatha Insisted Tn Govt Cauvery Water

இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது.இதை பார்க்கும் பொழுது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி நிரூபிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா - நீதிமன்றத்தையே மதிக்கவில்லை!! துரைமுருகன் கண்டனம்

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா - நீதிமன்றத்தையே மதிக்கவில்லை!! துரைமுருகன் கண்டனம்

திமுக அரசு

திமுக அரசு காவிரி விவகாரத்தில் ஜூலை 16 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியும், இந்திய பிரதமரை நேரடியாக சென்று சந்தித்து காவிரி விவகாரம் குறித்து முறையிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியும், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வலியுறுத்த முடியாமலும்,

காவேரி விவகாரத்தில் மூக்கை துளைத்த பிரேமலதா - கடுப்பான முதல்வர்! | Premalatha Insisted Tn Govt Cauvery Water

உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியத நிலையில்,தொலைநோக்கு பார்வையோடு நமக்கு கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிப்பது, விவசாயத்திற்கும், தொழில்களுக்கும், குடி தண்ணீகுக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.

நாங்கள் (திமுக) டெல்டா காரங்க தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்டா பகுதி விவசாயிகளை மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.