தமிழ்நாட்டிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு பரிந்துரை..!!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என காவிரி ஒழுங்காற்று வாரியம் கர்நாடக அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி விவகாரம்
தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் காவிரி நீர் விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை என குற்றம்சாட்டி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இதன் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரை 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.இதே உத்தரவை தான் உச்ச நீதிமன்றமும் பிறப்பித்திருந்தது.
தண்ணீர் திறந்து விட வேண்டும்
ஆனால் இதனை பின்பற்றாத கர்நாடக அரசு கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 3000 கன அடி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கடந்த இரண்டு நாட்களாக 4 ஆயிரம் கன அடிக்கும் குறைவாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுத்தரப்பில் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் புள்ளிவிரங்கள் அடிப்படையில் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.