தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா - நீதிமன்றத்தையே மதிக்கவில்லை!! துரைமுருகன் கண்டனம்
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.
காவிரி பிரச்சனை
கர்நாடக மாநிலத்தில், நேற்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது பற்றி அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, தங்கள் மாநிலத்தில் தண்ணீர் குறைவான அளவிலேயே பெய்துள்ள காரணத்தால், தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே தர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு ஜூலை இறுதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட இயலாது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் கண்டனம்
இது தமிழக அரசியல் தலைவர்களிடம் இருந்து கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை வேலூரில் சந்தித்து போது பேசியது வருமாறு,
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை காவிரி விவகாரத்தில் மதிக்கவில்லை. போதிய தண்ணீர் இருப்பு கர்நாடகா அணைகளில் உள்ளது. தற்போது 4 ஆயிரம் கனஅடி தான் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் என கூறி, அனைத்து கட்சிக் கூட்டம் நடத்துவதா அல்லது கடிதம் எழுதுவதா என அவரே முடிவு எடுப்பார் என்றும் கூறினார்.