ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு - வளைகாப்புக்கு செல்கையில் கொடூரம்!
கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி பலி
தென்காசி நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. எட்டு மாதங்களுக்கு முன் திருமணமான நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதனால் அவருக்கு வளைகாப்பு செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
ரயில்வே உத்தரவு
அந்த ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயற்சித்துள்ளார். இதில் நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரது உடலை மீட்ட ரயில்வே காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும்,
அபாய சங்கில் செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.