கர்ப்பிணிப் பெண்னுக்கு நேர்ந்த அவலம்; இது என்ன மாடல்? கொந்தளித்த அண்ணாமலை !

M K Stalin BJP K. Annamalai Tiruppur
By Swetha Apr 09, 2024 01:00 PM GMT
Report

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்று அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளார்.

கொந்தளித்த அண்ணாமலை

உடுமலைப்பேட்டை பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை துணியை கொண்டு டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

கர்ப்பிணிப் பெண்னுக்கு நேர்ந்த அவலம்; இது என்ன மாடல்? கொந்தளித்த அண்ணாமலை ! | Annamalai Tweet About Dmk Govt

இந்த நிகழ்வை குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் ஒன்றில், சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை, துணியால் டோலி கட்டி, மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் காணொளி ஒன்றை, சமூக வலைத்தளத்தில் காண நேர்ந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

திருடனே திமுக தான்;கமல்ஹாசனை மனநல காப்பகத்தில் சேர்க்கணும்- அண்ணாமலை சாடல்!

திருடனே திமுக தான்;கமல்ஹாசனை மனநல காப்பகத்தில் சேர்க்கணும்- அண்ணாமலை சாடல்!

இது என்ன மாடல்?

கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் மூலம், பல ஆயிரம் கோடி நிதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டும், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று.

கர்ப்பிணிப் பெண்னுக்கு நேர்ந்த அவலம்; இது என்ன மாடல்? கொந்தளித்த அண்ணாமலை ! | Annamalai Tweet About Dmk Govt

மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள், அந்தத் திட்டங்களை ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெறும் அறிவிப்போடு மட்டும் நிறுத்திக் கொள்கிறாரே தவிர, அவற்றை நிறைவேற்றுவதில்லை.

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.