திருடனே திமுக தான்;கமல்ஹாசனை மனநல காப்பகத்தில் சேர்க்கணும்- அண்ணாமலை சாடல்!
கமல்ஹாசனை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
அண்ணாமலை சாடல்
தமிழ்நாட்டில் நடப்பாண்டின் மக்களவை தேர்தல் களம் சூடு பிடிக்க தொட்டங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை சரவணம்பட்டியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.அப்போது பேசிய அவர், திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தொடர்புபடுத்தி நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி வேலை செய்து, தனது பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
கமல்ஹாசன்
பணத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்குப் பிறகு அந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.
தேர்தல் சமயத்தில் திமுக அனைத்து தவறுகளையும் செய்து விட்டு மற்றவர்களை திருடன் என்கிறது. உண்மையான திருடன் திமுக தான். ஆர்.எஸ்.பாரதி பேசுவதிலேயே தெரிகிறது என்றார்.
இதையடுத்து நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமலின் கருத்துக்கு பதில் அளித்தவர், “கமலஹாசன் மூளைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயநினைவோடு தான் இருக்கிறாரா என மருத்துவப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவரை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் விமர்சித்தார். ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிற்கு கமல் விற்றுவிட்டார்” என்று விமர்சித்துள்ளார்.