கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விவரம் இதோ..
கர்ப்பணி பெண்களுக்கு பலனளிக்கக் கூடிய திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.
கர்ப்பிணி
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், சிகிச்சை மற்றும் மருந்துகளின் செலவில் உதவுவதையும் நோக்கமாக பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும், கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்களின் கணக்கில் 5000 ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த 5000 ரூபாய் டிபிடி மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மூன்று தவணைகளாக அனுப்பப்படுகிறது.
நிதியுதவி
தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அல்லது பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த பெண்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
எந்தவொரு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களுடனும் தொடர்புடைய பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் பலனை அரசு வழங்குவதில்லை.