ஆசையாய் கேட்ட கர்ப்பிணி மனைவி... அடித்தே கொன்ற காதல் கணவன்! பின்னணி என்ன?
வளைகாப்பு நடத்த கேட்ட கர்ப்பிணி மனைவியை, கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் தம்பதி
கடலூர், விருத்தாசலத்தை அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் அற்புதராஜ்(20). 10 ஆம் வகுப்பு முடித்திருந்த அற்புதராஜ் காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார்.
அதேப்பகுதியில், வீரரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் சக்தி(18). 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த இவர் அருகில் உள்ள தனியார் பேக்கரிகடை ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார்.
கர்ப்பிணி மனைவி
ஏற்கனவே, அற்புதராஜும் அங்கு வேலைபார்த்து வந்துள்ள நிலையில் இருவருக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவீட்டாருக்கும் காதல் விவகாரம் தெரிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். அதன்பின் சக்தியின் தாய் லதா வீட்டில், இருவரும் ஒன்றாக வசித்துவந்துள்ளனர்.
அடித்துக் கொன்ற கணவன்
இந்நிலையில், 7 மாத கர்ப்பமாக இருக்கும் சக்தி, தனது காதல் கணவரிடம் வளைகாப்பு நடத்தக் கூறி கேட்டுள்ளார். அதற்கு கடன் சுமையை காரணம் காட்டி மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அற்புதராஜ் உணவு சாப்பிட வந்துவிட்டு பின் வேலைக்கு திரும்பியுள்ளார். அதற்கிடையே சக்தி இறந்து கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக்தியின் தாய் கதறி அழுதுள்ளார்.
தீவிர விசாரணை
அதனையடுத்து சம்பவம் அறிந்து வந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து கணவரின் மேல் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரித்ததில், தனது மனைவியை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார் அற்புதராஜ்.
மேலும், இறந்து போன சக்தி தனது வீட்டில் உள்ள கதவுகள், சுவர்களில் ஐ லவ் யு அம்மா, true lovers என கணவர் மற்றும் அம்மா பேரை வீடு முழுவதும் எழுதி வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல், அம்மா உன்ன நான் புரிஞ்சுக்காம போயிட்டேன். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா.
உன்ன என்னால மறக்க முடியாது அம்மா. நீ எனக்காக நல்லா இருக்கணும் அம்மா என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். இதன் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.