கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம்; இல்லையெனில் ஆறுதல் பரிசு - எகிறிய பிஸ்னஸ்!

Pregnancy Crime Bihar
By Sumathi Jan 02, 2024 07:27 AM GMT
Report

 பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம் வழங்கப்படும் எனக் கூறி மோசடி செய்யப்பட்டுள்ளது.

நூதன மோசடி

பீகார், நவாடாவில், `அகில இந்திய கருத்தரிப்பு வேலை வாய்ப்பு’ என்ற பெயரில் விளம்பரம் ஒன்று செய்துள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப் மற்றும் சோஷியல் மீடியா மூலம் இக்கும்பல்,

pregnant-job-agency fraud

கருத்தரிப்பதில் சிக்கல்களை சந்திக்கும் பெண்களை கர்ப்பமுறச் செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இதன் மூலம் மோசடி செய்ததாக இக்கும்பம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பிறந்தநாள் விழாவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? - மமதா சர்ச்சை பேச்சு

பிறந்தநாள் விழாவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? - மமதா சர்ச்சை பேச்சு

சிக்கிய கும்பல்

அதன்பின் பேசிய போலீஸ் அதிகாரி கல்யான் ஆனந்த், ``வாட்ஸ்ஆப் மற்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகும் விளம்பரத்தை பார்த்து யாராவது அக்கும்பலை தொடர்பு கொண்டால், உடனே பதிவுக்கட்டணமாக 799 ரூபாய் அனுப்பும்படி சொல்கிறார்கள். அப்பணம் கிடைத்தவுடன் சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்கின்றனர்.

கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம்; இல்லையெனில் ஆறுதல் பரிசு - எகிறிய பிஸ்னஸ்! | Pregnant Job Agency Bihar Nut Fraud

அதில் யாரை கர்ப்பமாக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துவிட்டப்பின், அப்பெண்ணின் அழகுக்கு தக்கபடி 5 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தும்படி கேட்டுக்கொள்வார்கள்.

அதன் பின்னர் குறிப்பிட்ட பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டால் ரூ.13 லட்சம் வரை கொடுக்கப்படும் என்றும், ஒருவேளை கர்ப்பமாக்காவிட்டாலும் ரூ.5 லட்சம் கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறி இருக்கின்றனர். இம்மோசடியில் ஈடுபட்டதாக எட்டு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இதில் மூளையாக செயல்பட்டவர்கள் உட்பட மேலும் சிலரை தேடி வருகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.