பெண்களை கர்ப்பமாக்க ரூ.25 லட்சம் சம்பளம் - மர்ம நபரின் திட்டத்தில் சிக்கிய நபர்..!

Puducherry
By Thahir Jul 26, 2023 03:39 AM GMT
Report

பெண்களை கர்ப்பமாக்க ரூ.25 லட்சம் சம்பளம் எனக் கூறி மோடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம்

புதுச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய ஸ்ரீஜித் என்பவர் சொந்தமாக ஒரு கெஸ்ட் ஹவுஸ் நடத்தி வந்துள்ளார். இங்கு நேபாளத்தை சேர்ந்த ஷாஜன் பட்டாராய் என்னும் 34 வயதுடைய நபர் கெஸ்ட் ஹவுஸில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த மாதம் மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். தன்னிடம் ஒரு ஆஃபர் இருப்பதாகவும் அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பெண்களை கர்ப்பமாக்க ரூ.25 லட்சம் சம்பளம் - மர்ம நபரின் திட்டத்தில் சிக்கிய நபர்..! | Rs 25 Lakh Salary To Make Women Pregnant

இது குறித்து அவர் விரிவாக கூறுகையில் அந்த நபர் ஒரு குழந்தை பேரு வைத்தியசாலை நடத்தி வருவதாகவும், அங்கே குழந்தைக்காக வரும் பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் அவர்கள் கர்ப்பமானால் 25 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அட்வான்ஸ் பணமாக 2 லட்சம் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

50 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம்

அதற்கேற்ப ஷாஜன் பட்டாராய் அவரது ஆதார் கார்டு, அடையாள அட்டை, வங்கி கணக்கு போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று அந்த மர்ம நபர் அனுப்பி வைத்துள்ளார். அதில் பெண்ணுடன் உறவு கொள்ள அட்வான்ஸ் 5 லட்சம் 49 ஆயிரம் ரூபாய் ஷாஜன் பட்டாராய் வங்கி கணக்கில் செலுத்தியது போல் ஆவணங்கள் அதில் அனுப்பப்பட்டிருந்தன. 

பெண்களை கர்ப்பமாக்க ரூ.25 லட்சம் சம்பளம் - மர்ம நபரின் திட்டத்தில் சிக்கிய நபர்..! | Rs 25 Lakh Salary To Make Women Pregnant

பின்னர் மீண்டும் தொடர் கொண்டு பேசிய அந்த மர்ம நபர் இந்த ஐந்து லட்சம் மற்றும் 49 ஆயிரம் ரூபாயை முழுவதும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு முன்பு விண்ணப்ப படிவம் ஒன்று பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து ஷாஜன் பட்டாராய் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதா? என்பதை ஆய்வு செய்யாமல் அந்த மர்ம நபர் அனுப்பிய கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்தியுள்ளார்.

போலீசில் புகார் 

அதன்பின் அந்த நபரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நம்பரை பிளாக் செய்துவிட்டார். அதன் பின் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்தவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

ஒரு ரூபாய் கூட அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என்பதை அறிந்த ஷாஜன் பட்டாராய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பின்னர் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.