‘’இந்த இடங்களில் கொரோனா மேலும் அதிகரிக்கக்கூடும்" : எச்சரிக்கும் அமைச்சர்
சென்னையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேலும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா332 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா
செங்கல்பட்டில் 60 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ள நிலையில் தற்போது 1,632 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தொற்று அதிகரிக்கும் இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது.
எச்சரிக்கும் அமைச்சர்
அதேபோல் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்ட வாய்ப்பிருக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் . சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
சென்னையில் கொரோனா தொற்றை குறைத்தால் மற்ற பகுதிகளில் குறையும்.சென்னையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தினால் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும். சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூரில் தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்றார்.
கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்? உலக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்