மாணவியை அடைய சதித்திட்டம்..அடிக்கடி பாலியல் தொல்லை-கம்பி எண்ணும் போலி சாமியார்!
மாணவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று திட்டம் போட்ட சாமியார் நன்றாக படிக்க வைப்பதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போலி சாமியார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம். இப்பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சாமியாராக அழைக்கப்பட்டு வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கோவில் குறி சொல்லி வந்திருக்கிறார்.
அந்த பகுதியில் மக்களிடையே பிரபலமாக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி அண்மையில் குறி கேட்பதற்காக பிரசாந்த் இடம் சென்றிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை
மாணவியை பார்த்ததுமே அவரை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கிறார் பிரசாந்த். அவர் போட்ட திட்டத்தின்படி நன்றாக படிக்க வைக்கிறேன் என்று சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி இருக்கிறார்.
ஆசை வார்த்தைகள் மூலம் அந்த மாணவியை வசியப்படுத்தி இருக்கிறார். இதனால் அந்த மாணவி பிரசாந்த்தை அடிக்கடி சந்தித்து வந்திருக்கிறார். அப்போது மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
பெற்றோர் புகார்
இதை யாரிடமும் வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார். அந்த மாணவியை அடிக்கடி வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
சாமியாரின் பாலியல் தொல்லை அதிகமானதால் வேறு வழியில்லாமல் பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் சிறையில் அடைத்துள்ளனர்.
உலகின் மிக அழகான முகம் உடையவர்கள்.. இவர்கள்தான்?