கடவுளா? அல்லது சாமியாரா?- OTTயில் வெளியான நித்யானந்தாவின் ஆவணப்படம்!

Viral Video Nithyananda
By Thahir Jun 04, 2022 05:16 AM GMT
Report

கடந்த ஜூன் 2 ஆம் தேதி My Daughter Joined a Cult என்னும் பெயரில் நித்யானந்தாவின் ஆவணப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

நித்யானந்தா மீது இந்திய அரசு பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் நேபாளம் வழியாக , தீவு ஒன்றிற்கு தப்பி ஓடிவிட்ட நித்தியானந்தா இந்துக்களுக்கான தனி நாடை உருவாக்கியுள்ளேன்.

கடவுளா? அல்லது சாமியாரா?- OTTயில் வெளியான நித்யானந்தாவின் ஆவணப்படம்! | Docu Series On Nithyananda Is Sreaming On Hotstar

கைலாசாவிற்கு பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில்தான் சமீப காலமாக நித்தியானந்தா உடல்நிலை மோசமானதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

தன்னை சுற்றி இருந்தவர்களை கூட நினைவுப்படுத்தி பார்க்க முடியாமல் , தனது பெயரைக்கூட சரியாக எழுத தெரியாமல் இருந்த நித்தியானந்தா தற்போது கோமாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி My Daughter Joined a Cult என்னும் பெயரில் நித்யானந்தாவின் ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

மூன்று பாகங்களாக வெளியாகியுள்ள இந்த படத்தை வைஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்க நமன் சரையா என்பவர் இயக்கியுள்ளார்.

இது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் நித்தியானந்தாவின் வாழ்க்கை முறை , அவர் எப்படி பக்தர்களை கவருகிறார், அவர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தினார், அவர் தியான பீடம் அமைத்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கோணங்களை அலசுகிறது.

கடவுளா? அல்லது சாமியாரா?- OTTயில் வெளியான நித்யானந்தாவின் ஆவணப்படம்! | Docu Series On Nithyananda Is Sreaming On Hotstar

இதில் நிதியானந்தாவின் முன்னாள் பக்தர்கள் , இந்நாள் பக்தர்கள் , வல்லுநர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் நித்யானந்தா குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பட டிரைலரில் மில்லியன் கணக்கானவர்களால் நேசிக்கப்படுகிறார், மில்லியன் கணக்கானவர்களால் வெறுக்கப்படுகிறார், யார் இவர்? கடவுளா? அல்லது சாமியாரா? என குறிப்பிடப்பட்டிருக்கிறது.