உலகின் மிக அழகான முகம் உடையவர்கள்.. இவர்கள்தான்?

Viral Photos Johnny Depp
By Sumathi Jun 23, 2022 10:08 AM GMT
Report

ஆம்பர் ஹெர்ட் உலகிலே மிக அழகான முகம் உடைய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆம்பர் ஹெர்ட்

பிரபல ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட். இவர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததன் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார்.

உலகின் மிக அழகான முகம் உடையவர்கள்.. இவர்கள்தான்? | Most Beautiful Face In The World

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இவர்களின் வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

 ராபர்ட் பாட்டின்சன்

இந்த நிலையில் 'பிஎச்ஐ' என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலகிலே மிக அழகான முகம் உடைய பெண் என்ற பெருமையை ஆம்பர் ஹெர்ட் பெற்றுள்ளார்.

உலகின் மிக அழகான முகம் உடையவர்கள்.. இவர்கள்தான்? | Most Beautiful Face In The World

'தி பேட்மேன்' நடிகர் ராபர்ட் பாட்டின்சன் உலகின் மிக அழகான ஆண் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜூலியன் டி சில்வா.

டாக்டர் ஜூலியன் டி சில்வா

இவர் பிஎச்ஐ-ப் பயன்படுத்தி நடத்திய ஆய்வில் ஆம்பர் ஹெர்ட்-யின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் சில்வா 92.15 சதவீத துல்லியத்துடன் உலகின் மிக அழகான மனிதர் ராபர்ட் பாட்டின்சன் என கண்டறிந்துள்ளார்.

கணவர் இறப்பு.. 2 வருடங்களுக்கு பின் அவரின் குழந்தையை பெற்றெடுத்த மனைவி!