என் பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து பாலியல் சித்ரவதை செய்தார்... - பிரபல நடிகர் மீது மாஜி மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
ஹாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜானி டீப். இவர் நடிப்பில் வெளியான ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் மூலம் உலகளவில் பிரபலமானார்.
கடந்த 1985-ம் ஆண்டு முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஆம்பர் ஹியர்டு என்பவரை 2-வது திருமணம் செய்தார்.
2 ஆண்டுகள் மட்டும் வாழ்க்கை நடத்திய ஜானி டீப் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
ஜானி டீப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டு பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை வந்தது. அப்போது, முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டு அளித்த தகவல்கள் நாடெங்கும் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டு கூறியதாவது -
ஜானி டீப்புடன் நான் 2 ஆண்டுகள் மட்டுமே என்னால் வாழமுடிந்தது. ஏனென்றால், என்னை அவர் பல முறை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஒருமுறை நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு அவர் அதிகமாக குடித்துவிட்டார்.
குடிபோதையில் அவர் என்னை பாலியல் ரீதியாக கடுமையாக துன்புறுத்தினார்.
அவர் குடித்த மதுபான பாட்டிலை வைத்து என் பிறப்புறுப்பில் திணித்து, என்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தார். இதனால், என்னுடைய பிறப்புறுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனே, நான் மருத்துவமனையில் சென்றேன். அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தன்னை மிகவும் நல்லவர் போல அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால், அவரின் சுயரூபம் இதுதான்.
திருமணம் செய்யும்போது ஜானி டீப் மீது நல்ல மதிப்பு, மரியாதை வைத்திருந்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யாக்கிவிட்டார்.
என்று ஆம்பர் ஹியர்டு நீதிமன்றத்தில் கதறி அழுது பேசினார்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று ஜானி டீப் தரப்பு வழக்கறிஞர், ஆம்பர் ஹியர்டு விளம்பரத்திற்காக இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று தெரிவித்தார்.
ஜானி டீப் மீது முன்னாள் மனைவி கூறி இந்தத் தகவல் தற்போது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.