கணவர் இறப்பு.. 2 வருடங்களுக்கு பின் அவரின் குழந்தையை பெற்றெடுத்த மனைவி!

Pregnancy Viral Photos
5 நாட்கள் முன்

கணவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு ஒரு குழந்தையை மனைவி பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் பிரிட்டன் நாட்டில் அரங்கேறியுள்ளது.

கணவர் இறப்பு

பிரிட்டன் நாட்டின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண் லாரன் மெக்ரேகர். இவரின் கணவரான கிரிஸ் மெக்ரெகர் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.

கணவர் இறப்பு.. 2 வருடங்களுக்கு பின் அவரின் குழந்தையை பெற்றெடுத்த மனைவி! | Woman Has A Baby For Her Husband After His Death

மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்து வந்த கிரிஸ் மற்றும் லாரன் தங்களுக்கு ஆசை குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது, கிரிஸ்சுக்கு மூளையில் கட்டி பாதிப்பு இருந்த அதிர்ச்சிக்குரிய தகவல் தெரியவந்துள்ளது.

 IVF சிகிச்சை

இதனால் இந்த தம்பதி மனமுடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி கிரிஸ் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார். இருப்பினும், கிரிஸ்சின் நினைவாக தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என லாரன் நினைத்து அதற்காக திட்டமிட்டுள்ளார்.

கணவர் கிரிஸ்சின் உயிரணுவை சேகரித்து வைத்த லாரன், அதை தனது IVF சிகிச்சைக்காக பயன்படுத்தியுள்ளார். எனவே, கிரிஸ் உயிரிழந்த ஒன்பது மாதத்திற்குப் பின் IVF சிகிச்சை எடுத்துக்கொண்டு,

நெகிழ்ச்சி சம்பவம்

planned C section மகப்பேறு முறையில் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் லாரன் மெக்ரேகர். தந்தை இறந்து இரண்டு ஆண்டு கழித்து கடந்த மே 17ஆம் தேதி இந்த குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு செப் என பெயர் சூட்டியுள்ளார் லாரன் மெக்ரேகர். குழந்தை செப் தந்தை கிரிஸ் போலவே உடல் தோற்றம் கொண்டுள்ளதாகக் கூறும் மனைவி லாரன் கிரிஸ்சின் மறைவால் கண்ட இழப்பை

தனது செல்லக் குழந்தை மூலம் திரும்பப்பெற்றுள்ளேன் என்கிறார் நெகிழ்ச்சியாக. 

அப்படி அழைக்காதீர்கள் - திடீர் வேண்டுகோள் விடுத்த நடிகை ஜனனி ஐயர்!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.