த்ரிஷா மீது பொறாமைப்பட்ட சிம்ரன்; எதற்கு தெரியுமா? இயக்குநர் சொன்ன சீக்ரெட்!
த்ரிஷாவை பார்த்து சிம்ரன் பொறாமைப்பட்டதாக இயக்குநர் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார்.
அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் த்ரிஷா அறிமுகமான ஜோடி படத்தின் இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி ஒன்றில்,
இயக்குநர் தகவல்
"ஜோடி படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என்று த்ரிஷாவிடம் கேட்டேன். ஆனால் அவரோ இல்லை வேண்டாம் சினிமா எப்படி இருக்கும் என்பதை பார்க்கத்தான் வந்தேன். எனக்கு இந்த ரோலே போதும் என்று சொல்லிவிட்டார்.
அதனையடுத்து சிம்ரனுக்கு அருகில் நிற்கும்படி காட்சியை எடுக்க திட்டமிட்டு த்ரிஷாவை சிம்ரன் அருகில் நிற்கவைத்தே ஃப்ரேமும் செட் செய்துவிட்டேன். அப்போது சிம்ரனோ த்ரிஷாவை கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேல் திரும்பி திரும்பி பார்த்தார்.
என்னடா இது இப்படி ஒரு அழகான பொண்ணு நிக்குது என்று பொறாமைப்படும்படிதான் அவரது பார்வை இருந்தது. பிறகு ஷாட்டை எடுத்து முடித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.