பாஜக திரும்பிய நிதிஷ்; குறிச்சு வச்சுக்கோங்க, இதுதான் நடக்கும் - பிரசாந்த் கிஷோர் உறுதி!

BJP Prashant Kishor Bihar
By Sumathi Jan 29, 2024 05:24 AM GMT
Report

நிதிஷ்குமார் முடிவு குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார்  கூட்டணி

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு நிர்வாக பிரச்சனைகள், இண்டியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், பாஜக அணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார்.

prashant-kishore - nitish-kumar

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், ”பிஹாரில் அமைந்துஅள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. 2025-ல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது.

புதிய திருப்பம்: பிரசாந்த் கிஷோர்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு - சிக்கலில் ஆளுங்கட்சி!

புதிய திருப்பம்: பிரசாந்த் கிஷோர்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு - சிக்கலில் ஆளுங்கட்சி!

பிரசாந்த் கிஷோர் கருத்து

அப்படியென்றால் இப்போது அமைந்துள்ள ஜேடியு - பாஜக கூட்டணி ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான ஆயுளே கொண்டிருக்கும். இந்தக் கூட்டணி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்வரை கூட தாங்காது என்பதை நான் உங்களுக்கு எழுத்துபூர்வமாக கூட தருகிறேன்.

பாஜக திரும்பிய நிதிஷ்; குறிச்சு வச்சுக்கோங்க, இதுதான் நடக்கும் - பிரசாந்த் கிஷோர் உறுதி! | Prashant Kishore About Nitish Kumar Join Bjp

மக்களவைத் தேர்தல் முடிந்த 6-வது மாதமே அடுத்த மாற்றம் நிகழும். ஏற்கெனவே கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அப்போதைய காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு மகா கூட்டணி தாங்காது என்று கூறியிருந்தேன். அது நடந்தது.

அதேபோல் இப்போதும் சொல்கிறேன் 2025 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரை பாஜக - ஜேடியு கூட்டணி தாக்குப்பிடிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.