புதிய திருப்பம்: பிரசாந்த் கிஷோர்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு - சிக்கலில் ஆளுங்கட்சி!
பிரசாந்த் கிஷோர், சந்திரபாபு நாயுடு மீட்டிங் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர அரசியல்
ஆந்திர மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.
சூடு பிடித்துள்ள அரசியல் களத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும், தெலுங்கு தேசம் கட்சியும் கடும் போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
இனி ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் தான் - முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு...!
மீட்டிங்கால் பரபரப்பு
இந்த திடீர் நச்திப்பு இணையத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. தற்போது, இந்தச் சந்திப்பு குறித்து பிரசாந்த் கிஷோர், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாங்கள் சந்தித்துக் கொண்டதில் மற்றவர்களுக்கு என்ன அவ்வளவு உற்சாகம் என்று புரியவில்லை.
சந்திரபாபு நாயுடு ஒரு மூத்த தலைவர், அவர் என்னைச் சந்திக்க விரும்பினார், அதனால் இங்கு வந்து அவரை சந்தித்தேன்" எனத் தெரிவித்துள்ளார். சந்திரபாபு மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்பு மூன்று மணி நேர நடந்ததாகவும் அதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இக்கட்சிக்கு ஷோ டைம் கன்சல்டன்சி என்ற நிறுவனம் தேர்தல் வியூகம் வகுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுடன் இணைந்து தான் பிரசாந்த் கிஷோர் இனி செயல்படப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.