பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்திப்பு...!

Narendra Modi YS Jagan Mohan Reddy
By Nandhini Aug 22, 2022 08:50 AM GMT
Report

டெல்லியில் பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து பேசினார். 

அமித்ஷா - ஜூனியர் என்.டி.ஆர் சந்திப்பு

நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்துப் பேசியுள்ளார். திடீரென அமித்ஷாவை ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்துப் பேசியுள்ளதால் அரசியலில் நுழையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

பிரதமர் மோடி - முதல்வர் ஜெகன் மோகன் சந்திப்பு

இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பில் பொலவரம் திட்டத்தை விரைந்து முடிக்க நிதியை விடுவிக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் பிரதமர் மோடியிடம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Narendra Modi - YS Jagan Mohan Reddy