இனி ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் தான் - முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு...!

Andhra Pradesh YS Jagan Mohan Reddy
By Nandhini Jan 31, 2023 09:32 AM GMT
Report

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமையும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் இன்று அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு

சர்வதேச கூட்டமைப்பு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.

அப்போது, இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க நான் வந்துள்ளேன்.

மார்ச் 3, 4ம் தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு அங்கு நடைபெற உள்ளது. வைசாகப்பட்டினம் ஆந்திராவின் தலைமையகமாகவும், கவர்னர் இல்லமாகவும் செயல்படும்.

நானும் விசாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்ந்துடுவேன். ஆந்திர பிரதேசத்தில் தொழில் செய்வது மிகவும் எளிதானது என்பதை காண உங்களுக்கும்,  உங்கள் சகாக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இருந்தாலும், சட்டமன்றக் கிளை அமராவதியில் இருக்கும். 

அரசாங்கத்தின் நிர்வாக, சட்டமன்ற மற்றும் நீதித்துறை கிளைகளின் இருப்பிடங்களை விநியோகிப்பது சமமான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

1956ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் முந்தைய மதராஸ் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டபோது, ​​கர்னூல் புதிய தலைநகராக நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் அங்கு மாற்றப்படும். 

இவ்வாறு அவர் பேசினார். 

ys-jagan-mohan-reddy-andra-pradesh