சாதிவாரியா கணக்கெடுத்தா மட்டும் அது நடந்திடாது.. ஆனால்.. பிரசாந்த் கிஷோர்

Delhi Government Of India Prashant Kishor
By Sumathi May 01, 2025 04:40 AM GMT
Report

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

prasanth kishore

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், சமூகம் பற்றி சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அதிவிரைவில் இரங்கல் செய்தி; தலை துண்டாக்கப்படும் - சீமானுக்கு கொலை மிரட்டல்

அதிவிரைவில் இரங்கல் செய்தி; தலை துண்டாக்கப்படும் - சீமானுக்கு கொலை மிரட்டல்

பிரசாந்த் கிஷோர் கருத்து

அதனை வரவேற்கவே செய்கிறோம். ஆனால், பீகாரில் நாம் காண்பதுபோல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே நிலைமையை முன்னேற்றி விடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை கொண்டு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.

சாதிவாரியா கணக்கெடுத்தா மட்டும் அது நடந்திடாது.. ஆனால்.. பிரசாந்த் கிஷோர் | Prashant Kishore About Caste Census

அப்படி செய்யும்போது மட்டுமே உண்மையான மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

தற்போது இந்த முடிவிற்கு ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.