Friday, Jul 18, 2025

அதிவிரைவில் இரங்கல் செய்தி; தலை துண்டாக்கப்படும் - சீமானுக்கு கொலை மிரட்டல்

Naam tamilar kachchi Tamil nadu Seeman Crime
By Sumathi 3 months ago
Report

சீமானுக்கு சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

seeman

அதில், ‘சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், விரைவில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும். நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு இரங்கல் செய்தி அதிவிரைவில் வரும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள்.

தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கே. அதன் விளைவு மரணம்’ என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மற்றொரு நபர் ஸ்டோரியில் பட்டா கத்திகளின் படங்களை பதிவிட்டு கொச்சை வார்த்தைகளுடன் ‘விரைவில் சம்பவம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.

பாஜக-தவெக கூட்டணி? உறுதிசெய்த நயினார் நாகேந்திரன்

பாஜக-தவெக கூட்டணி? உறுதிசெய்த நயினார் நாகேந்திரன்

சீமான் சார்பில் புகார்

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட 2010வது ஆண்டு தொடங்கி இன்றுவரை எந்த இடத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெலுங்கு மக்கள் குறித்தோ மற்ற எந்த தேசிய இன மக்கள் குறித்தோ இழிவாகவோ, அவதூறாகவோ பேசியது கிடையாது.

அதிவிரைவில் இரங்கல் செய்தி; தலை துண்டாக்கப்படும் - சீமானுக்கு கொலை மிரட்டல் | Death Threat To Seeman Via Instagram

மாறாக நாம் தமிழர் கட்சியில் தெலுங்கு இன மக்கள் உட்பட பல தேசிய இன மக்கள் உறுப்பினர்களாகவும், பல முக்கிய பொறுப்பாளராகவும், சட்டமன்ற. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். தெலுங்கு இன மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இழிவாக பேசி வருவதாகவும் அதை நிறுத்தாவிட்டால் அவரது தலை துண்டாக்கப்படும் என்றும் கொலை மிரட்டல் விடுத்து,

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பதிவிட்டுள்ள மேற்படி சந்தோஷ் என்கிற நபர் மீதும், அவர் டேக் செய்து பதிவிட்டுள்ள மேற்படி 4 பேர்கள் மீதும், அவர்கள் சார்ந்துள்ள இயக்கம் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தங்களை இதன் மூலம் கேட்டுகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.