ஆபாச வீடியோக்களில் இருப்பது நானே இல்லை - பல்டி அடித்து கதறிய பிரஜ்வல் ரேவண்ணா!
ஆபாச வீடியோக்களில் இருப்பது நான் இல்லை என பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
ஆபாச வீடியோக்கள்
ஹசன் தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை ஆறு நாள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. அப்போது அவரிடம் 161 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரஜ்வல் மறுத்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா மறுப்பு
மேலும், " நீங்கள் காட்டிய வீடியோக்களில் இருப்பது நான் இல்லை. அவர்கள் அனைவரும் எனக்குப் பரிச்சயமானவர்கள். நான் யாரையும் பலாத்காரம் செய்ததில்லை. பலாத்கார புகார்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வீடியோக்கள் குறித்து எங்களுக்கு அதிகம் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.
பிரஜ்வலுக்கு எதிரான வழக்கில் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்ட செல்போன் பலமான ஆதாரமாக உள்ளது. இந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்டால், வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், அதை அதிலிருந்து மீட்டெடுக்கலாம்.
எனவே தற்போது அந்த பணியில் எஸ்ஐடி தீவிரமாக இறங்கியுள்ளது.