என் மருமகள் நடத்தை சரியில்லை; ரேவண்ணா மீது பாலியல் புகாரளித்த பெண் - மாமியார் தடாலடி!
பிரஜ்வல், ரேவண்ணா மீது பாலியல் புகாரளித்த பெண்ணின் மாமியார் விளக்கமளித்துள்ளார்.
பாலியல் புகார்
ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடா. இவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்பியாக உள்ளார்.
இவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறியுள்ளது. இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது, ரேவண்ணா வீட்டு பணிப்பெண் போலீசில் புகாரளித்துள்ளார். அப்பாவும் மகனும் பெண்களை சூறையாடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
மாமியார் விளக்கம்
இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே தற்போது பகிரங்கமாக புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், புகாரளித்த பெண்ணின் மாமியார் கவுரம்மா ஹாசனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரேவண்ணா மீது புகார் அளித்துள்ள எனது மருமகள் கடந்த 5 ஆண்டுக்கு முன்பே அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
ஆனால் இப்போது தான் புகார் அளித்துள்ளார். இதன் பின்னணி நோக்கம் வேறாக இருக்கிறது. தேவகவுடா குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது மருமகளின் நோக்கமாக உள்ளது. ரேவண்ணா எங்கள் குடும்பத்துக்கு கடவுள் போன்றவர்.
அவரது மனைவி பவானி எங்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோவில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார்.