பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வழக்கு - ஏர்போர்ட்டிலேயே கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா அதிரடியாக விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு கர்நாடக தேர்தலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகள், பெண்கள் அமைப்புகள் என பலரும் கடும் போராட்டங்களை நடத்திய நிலையில், கர்நாடக அரசு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
தேர்தலில் வாக்களித்த உடனே ஜெர்மனி நாட்டிற்கு பிரஜ்வல் ரேவண்ணா தப்பிவிட்டதாக கூறப்பட்டது. அவருக்கு இரண்டு முறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஏர்போர்ட்டிலேயே..
அவரின் பாஸ்ப்போர்ட்டை முடக்க கோரியும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஜாமீன் கோரி தான் மனு தாக்கல் செய்யப்போவதாக பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்று வெளியிட்டது.
அவர் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால், அவரை விமனநிலையத்திலேயே வைத்து கைது செய்ய போவதாக போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
அதே போலவே, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் வந்த நிலையில், அவரை எஸ்ஐடி அதிகாரிகள் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரிடம் நீதிமன்றம் அளித்த கைது வாரண்டின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.