சைலேண்டாக இந்தியா திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா..ஏர்போர்ட்டிலேயே கைது செய்யும் போலீஸ்?

Karnataka India
By Karthick May 30, 2024 05:33 AM GMT
Report

பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள‌ பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

Prajwal Revanna case

அங்கு ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண் உட்பட சில பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌.

பிரஜ்வல் ரேவண்ணா கைது - மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ரேவண்ணா கைது - மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு

இவ்வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. பாஜகவின் கூட்டணி கட்சியில் இருப்பதால் எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராடின. இதனால் பிரஜ்வல் மதசார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே கடந்த ஏப்ரல் 26 ம் தேதி இரவு பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீசும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீசும் பிறப்பித்தனர்.

சைலேண்டாக இந்தியா திரும்பும் பிரஜ்வல் ரேவண்ணா..ஏர்போர்ட்டிலேயே கைது செய்யும் போலீஸ்? | Prajwal Revanna To Be Arrested In Ariport Today

அவரது பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர். நாடு திரும்புகிறார் இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா இரு தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்'' என தெரிவித்தார்.

கைது செய்ய திட்டம் 

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி பிரஜ்வல் தரப்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மே 31ம் தேதி வழக்கை விசாரிப்பதாக கூறினார்.

Prajwal Revanna case

இதனையடுத்து இன்று பெங்களூரு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் பெங்களூரு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் வந்திறங்கியதும் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.