பிரஜ்வல் ரேவண்ணா கைது - மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆபாச வீடியோ சர்ச்சை
கர்நாடகா தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
பிரஜ்வல் ரேவண்ணா மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி மாநிலத்தின் முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தனி விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், வெளிநாடு தப்பி சென்றதாக கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து எந்த தகவலும் தற்போது வரை இல்லை.
அவர் எந்த நாட்டில் உள்ளார் என்பதும் தெரியவில்லை என்றாலும் அவர் ஜெர்மனி சென்றதாக கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
2 முறை ரேவண்ணாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவரின் பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு விசாரணை அதிகாரிகள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார்.
இச்சூழலில் தான், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி போலீசார் கடிதம் எழுதி நிலையிலும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்த பிறகும், பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி கடிதம் எழுதிய நிலையிலும், அக்கடிதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எப்பதிலும் கிடைக்கவில்லை.
மத்திய அரசும் ஒத்துழைப்பு அளித்தால் தான் ரேவண்ணாவை கைது செய்ய முடியும். மத்திய நீதிமன்றம் கைது வாரண்டு பிறப்பித்த பின்பு பாஸ்போர்ட்டை ரத்து செய்வது மத்திய அரசின் கடமை ஆகும்.