உண்மை வெளிவரும் - பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா ட்வீட்!!
கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றச்சாட்டு.
தேவகவுடா
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் 1996 -ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக இருந்தவர் தேவகவுடா. கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்த இவரின் மகன்கள் ரேவண்ணா மற்றும் குமாரசாமி. குமாரசாமி கர்நாடகாவின் முன்னாள் முதல்வராவார்.
ரேவண்ணா மாநிலத்தின் அமைச்சராக இருந்துள்ளார். தேவகவுடாவின் பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் அரசியலில் உள்ளனர். வேட்பாளராக மண்டியா தொகுதியில் குமாரசாமி, ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டுள்ளனர்.
இரண்டு கட்டமாக அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை கர்நாடகா மாநிலத்தை உலுக்கி உள்ளது. .பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா இருக்கும் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணா இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி மாநிலத்தின் முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆபாச வீடியோ கிளிப்புகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான், குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா
பதிவு இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் வினவிய போது பதிலளித்த கர்நாடக சட்டமன்ற உறுப்பினரும், குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான ரேவண்ணா, என்ன மாதிரியான சதி நடக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
நான் பயந்து ஓடுபவன் அல்ல. 4-5 வருடங்களுக்கு பழமையான ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர் என கூறினார். முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணாவை சஸ்பெண்ட் செய்துள்ளது மதசார்பற்ற ஜனதா தளம். முன்னாள் வீட்டு உதவியாளர் அளித்த புகாரில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ரேவண்ணா மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் IPC 354A, 354D, 506, மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ವಿಚಾರಣೆಗೆ ಹಾಜರಾಗಲು ನಾನು ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಇಲ್ಲದ ಕಾರಣ, ನಾನು ನನ್ನ ವಕೀಲರ ಮೂಲಕ C.I.D ಬೆಂಗಳೂರಿಗೆ ಮನವಿ ಮಾಡಿದ್ದೇನೆ.
— Prajwal Revanna (@iPrajwalRevanna) May 1, 2024
ಸತ್ಯ ಆದಷ್ಟು ಬೇಗ ಹೊರಬರಲಿದೆ.
As I am not in Bangalore to attend the enquiry, I have communicated to C.I.D Bangalore through my Advocate. Truth will prevail soon. pic.twitter.com/lyU7YUoJem
இந்நிலையில், இது குறித்து நாடு தப்பித்ததாக கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணா தனது எக்ஸ் தளப்பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சி.ஐ.டி.யிடம் முறையிட்டுள்ளேன்.
விரைவில் உண்மை வெளிவரும்.