ஈபிஎஸ்-க்கு ஆதரவாக ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட போஸ்டர்கள் எரிப்பு - நள்ளிரவில் தொடரும் பரபரப்பு..!
பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டு சென்ற போஸ்டர்கள் எரிக்கப்பட்டதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேல்முறையீடு மனு விசாரணை
இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.
இதையடுத்து மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நள்ளிரவு விசாரணை செய்யப்பட உள்ளது.
இந்த மேல்முறையீடு மனுவை நீதிபதி துரைசாமி,மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு விசாரணை மேற்கொள்கிறது.
இந்நிலையில் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள நீதிபதி துரைசாமி வீட்டில் விசாரணை நடைபெறுவதால் அவரின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போஸ்டர்கள் எரிப்பு
இதனிடையே சென்னை பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டு சென்ற போஸ்டர்களை வழிமறித்த ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் போஸ்டர்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.