சாப்பிட்டதும் மறந்தும் கூட இதை செய்யக்கூடாது - எச்சரிக்கும் நிபுணர்கள்!
உணவுக்குப் பின் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உணவு பழக்கம்
நாம் உணவுக்குப் பின் செய்யக்கூடாத சில விஷயங்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று பார்ப்போம்.
மதிய உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது தான். ஆனால், சாப்பிட்ட உடனேயே படுத்துத் தூங்குவது செரிமான ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி, ஒழுங்கற்ற செரிமானம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நிபுணர்கள் அறிவுரை
சாப்பிட்ட உடன் புகை பிடிப்பது, நீங்கள் 10 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமான விளைவுகளை ஏற்படுத்தும். சாப்பிட்ட பின் குளிப்பது செரிமானத்தில் தாமதத்தை ஏற்படுத்தும். உணவுக்கு ஒருமணி நேரத்துக்கு முன் பழங்களை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லதாகும்.
சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடுவது தவறானது. சிலர் சாப்பிட்டு கை கழுவிய உடனே டீ, காபி அல்லது பால் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்து இருப்பர். இது ஒரு தவறான உணவுப் பழக்கம். காபி மற்றும் டீ அமிலத்தன்மை வாய்ந்தவை. அதேவேளையில், சாப்பிட்ட உடனே அதிக அளவில் தண்ணீரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
உணவுக்குப் பின் செரிமானத்துக்கு மெதுவான நடைபயிற்சி செய்வது நல்லது தான் என்றாலும், உடலை களைப்படையச் செய்யும் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.