சருமத்தில் தேவையில்லாத முடி இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க - பளீச்சிடும்!
சருமத்தில் உள்ள தேவையில்லாத முடியை நீக்க உதவும் இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம்.
தேவையில்லாத முடி
ஹார்மோன் மாற்றங்கள், மரபணு, மருந்துகள் போன்றவற்றால் பெண்களுக்கு சருமத்தில் தேவையற்ற முடி வளர்வது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இது முகம், கை, கால்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் ஏற்படலாம்.
இந்தப் பதிவில், சருமத்தில் உள்ள முடியை நீக்க உதவும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் முறை குறித்து பார்ப்போம். கடலை மாவு சருமத்தை மென்மையாக்கி, இறந்த செல்களை நீக்க உதவும். மஞ்சள் பாக்டீரியா தொற்றை தடுக்கும். இந்த இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால், முகத்தில் உள்ள முடியை நீக்கலாம்.
இயற்கை முறையில் தீர்வு
சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறை கலந்து சருமத்தில் அப்ளை செய்தால், இறந்த செல்களை நீக்கி முடி வளர்ச்சியை குறைக்க உதவும். பப்பாளி, மஞ்சள் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால், முடி வளர்ச்சியைக் குறைக்கும்.
கற்றாழையுடன் எலுமிச்சை சாறை கலந்து சருமத்தில் அப்ளை செய்து வர மெலனின் நிறமியை குறைத்து, முடி வளர்ச்சியை குறைக்க உதவும்.
முட்டையின் வெள்ளைக் கருவில் சோள மாவு சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால், சருமத்தை இறுக்கி, முடி வளர்ச்சியை குறைக்க உதவும். மேற்கண்ட பொருட்களை பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா என்பதை சரிபார்த்து, பின்னர் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.